வலைப்பூநண்பர் Raghuveeradayal Thirupathi Iyyengar அவர்களின் வலைபின்னலில் இருந்து மிக்க நன்றியுடன் சுடப்பட்டது.
சங்குச் சக்கரச் சாமி வந்து
சிங்கு சிங்கென ஆடுமாம் – அது
சிங்கு சிங்கென ஆடுமாம்!
உலகம் மூன்றும் அளக்குமாம் – அது
ஓங்கி வானம் பிளக்குமாம்!
கலகல எனச் சிரிக்குமாம் – அது
காணக் காண இனிக்குமாம்!
கொட்டுக் கொட்டச் சொல்லுமாம் – அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!
எட்டு எழுத்துச் சொன்ன பேர்க்கு
எந்த வரமும் அளிக்குமாம்!
யாரும் காண அரியதாம் – அது
யாரும் காண எளியதாம்!
பேரும் ஊரும் உள்ளதாம் – அது
பெரிய பெருமை கொண்டதாம்!
ஆதிமூலம் என்று சொன்ன
யானை முன்பு வந்ததாம்!
ஜோதி ரூபம் ஆனதாம் – அது
தூய வீடு தருவதாம் (சங்குச் …. )
No comments:
Post a Comment